அவசரம்


 

அவசர அவசரமாய் அமைச்சர் வரார்ன்னு
அறை நாளில் ஆரமிச்சு
அறை குறையாய் குழி தோண்டி
நாள் பத்தில் பாதி வளர்ந்து
நாங்க பாதை யெல்லாம் சிரிச்சு நின்னோம்
தைப் பொங்கல் தோரணம் போல்
கலர் கலராய் பூத்து நின்னோம்
வந்த அமைச்சர் ‘விருட்’ன்னு போயிட்டாரு
(வெத) வெதச்சவன் வீட்டடுக்கு போயிட்டான்

வழி நெடுக, வானம் பாத்து,
வாய் பொளந்து, வாடிப் போய் நிக்குறோம்
சின்ன தொரு சந்தோஷத்துக்காக
சிந்திக்காம விதைச்சிட்ட… இப்ப
சீரழிய விட்டுட்ட!

மரத்த வெச்சவன் தண்ணி ஊத்தலியே!

Advertisements